தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர்  ஸ்ரீதேவி அசோக்.வாணி ராணி,கல்யாண பரிசு உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்திருந்த இவர்.ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.இந்த தொடரில் வில்லியாக நடித்த இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றார்.

2019 ஏப்ரல் மாதம் பிரபல போட்டோக்ராபர் அசோக் என்பவரை ஸ்ரீதேவி மனம் முடித்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடர்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி அசோக்.இந்த இரண்டு தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் பகிர்ந்து வருவார் ஸ்ரீதேவி.பொம்முக்குட்டி அம்மாவுக்கு ரேத்வாவுடன் இணைந்து இவர் நடனமாடும் வீடியோக்கள் பல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.

தற்போது கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலில் தனது சீரியல் வாழ்க்கை குறித்தும்,பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார் ஸ்ரீதேவி.தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் ஆன பிக்பாஸ் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.பிக்பாஸ் தொடரில் இவரது நெருங்கிய நண்பர் ரியோ பங்கேற்று வருகிறார்.இது குறித்து பேசிய ஸ்ரீதேவி, ரியோவிடம் எந்த மாற்றமும் இல்லை எப்போதும் எப்படி இருப்பாரோ அதே போல தான் பிக்பாஸ் வீட்டிலும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஸ்ரீதேவி அளித்த பல சுவாரசியமான பதில்களை தெரிந்து கொள்ள முழு வீடீயோவை பார்க்கவும்