தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் & தெலுங்கில், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது F.I.R திரைப்படம். விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் F.I.R திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

F.I.R படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தற்போது தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படம்.

இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் சில தினங்களுக்கு நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.

பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டையில் கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சலும் என வலுவான ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளானார். இந்நிலையில் தற்போது வைரஸ் தொற்று இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

ஒரு வழியாக கோவிட்டில் இருந்து வெளியில் வந்துவிட்டேன்… எனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது… ஆனால் இது லேசான பாதிப்பு அல்ல… 10 நாட்கள் மிகக் கடுமையாக இருந்தது… இப்போது மிகவும் சோர்வாக இருக்கிறது… மிக விரைவில் பணிக்குத் திரும்ப நினைக்கிறேன்… அனைவரின் அன்பிற்கும் நன்றி! 

என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.