சிலம்பரசனின் மாநாடு பட கலக்கலான BLOOPER வீடியோ!
By Anand S | Galatta | January 18, 2022 17:58 PM IST

தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் முன்னணி நட்சத்திர நடிகராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிலம்பரசன், தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில், சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள, மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
மாநாடு திரைப்படத்தின் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார். மேலும் மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா,பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரிலீசுக்கு முன்னதாக பலவிதமான தடைகளை சந்தித்த மாநாடு திரைப்படம் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ரசிகர்களை வந்தடைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாநாடு திரைப்படம் 50 நாட்களை கடந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற மெஹரஸைலா பாடலின் ரீமிக்ஸ் வீடியோவாக மாநாடு BLOOPER வீடியோ வெளியானது. கலக்கலான அந்த BLOOPER வீடியோ இதோ…
Venkat Prabhu's classic reply to Maanaadu's negative review! Don't miss!
16/01/2022 06:35 PM
BIG NEWS: Official announcement on Silambarasan TRs Maanaadu REMAKE is here!
06/01/2022 02:22 PM