பேஸ்புக்கில் பழக்கம் ஆண் வேடம் அணிந்து வந்து சிறுமியை கடத்தி சென்ற பெண்.

facebook loveகேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்த  பிளஸ் 1 படித்து வரும் 15 வயது மாணவி ஒருவருடன்  சமூக வலைதளத்தில் ஆண் ஒருவர் பழகி உள்ளார். சிறுமியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி  உள்ளார். ஒரு வாரத்திற்கு  முன்பு அவரது வீட்டிற்குச் சென்று அந்தப் சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் சிறுமியை கடத்தி சென்றவரை  வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் மொபைல்  மூலம் சைபர்செல் உதவியுடன் தேடிய போது, சிறுமி திருச்சூரில் இருப்பதாக தெரிய வந்தது. 

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் திருச்சூர் நகரிலிருந்து சந்தியா என்பவரை கைது செய்தனர் . பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆண் வேடம் அணிந்த பெண் என்பதும் இவர் கடந்த இரண்டாயிரத்து பதினாறில் ஒரு 14 வயது சிறுமியை இதுபோல தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் விசாரணையில் வெளியானது. இவர் எதற்காக சிறுமியை கடத்திச் சென்றார் என்பது தெரியவில்லை. சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவ  பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சிறுமியை வீட்டில் இருந்த பலமாக ஏமாற்றி கடத்திச் சென்ற சந்தியாவை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் சந்தியா திருவனந்தபுரம் மாவட்டம் வீரன்னபுரம் பகுதியைச் சேர்ந்தவர் .  இவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயார் ஆவார். இவர் மனநிலை சரியிலாதவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சமூக வலைதளங்களில், ஆண் வேடத்தில் தோற்றமளித்து ஆணின் புனைப்பெயரில் சிறுமியை தொடர்புகொண்டு நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது மேலும் பேஸ்புக்கில் பழகி ஆண் வேடம் அணிந்து வந்து சிறுமியை கடத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.