வலிமை பொங்கல் என ரசிகர்கள் கொண்டாட தயாராக இருந்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பொங்கலுக்கு ரிலீசாகாமல் தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தனது பே வியூ ப்ராஜெக்ட்ஸ் சார்பாக தயாரித்தார். முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க, மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். மேலும் ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக்க தயாராகியிருக்கும் வலிமை திரைப்படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக வெளிவந்த வலிமை படத்தின் GLIMPSE  வீடியோ, ட்ரைலர் & மேக்கிங் வீடியோ அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூபில் 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.