மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வருகிறது ஆடுஜீவிதம் திரைப்படம். இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் கோல்ட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் மோகன்லால் கதாநாயகனாக நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தை பிரிதிவிராஜ் இயக்கியுள்ளார்.

கடைசியாக பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் இணைந்து நடித்த ப்ரோ டாடி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து கேஜிஎஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டைசன் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார் பிரித்விராஜ். 

முன்னதாக வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக லூசிஃபர் 2- எம்புரான் (L2:EMPURAAN) படத்தை பிரித்திவிராஜ் இயக்குகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் எம்புரான்-L2E படத்திற்கு முரளி கோபி கதை, திரைக்கதை எழுத பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் எம்புரான்-L2E திரைப்படத்தின் முதற்கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது தொடங்குவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ