வேகமெடுக்கும் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு இதோ..

புஷ்பா தி ரூல் படத்தின் அட்டகாசமான அப்டேட் இதோ - Pushpa the rule movie update here | Galatta

இந்திய சினிமாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அடுத்ததாக வரவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘புஷ்பா தி ரூல்’. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஸ்டைலிஷ் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து வரும் இப்படத்தின் முதல் பாகம் ‘புஷ்பா தி ரைஸ் ’ கடந்த ஆண்டு 2021 ல் வெளியாகி  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகளவில் வரவேற்பை பெற்ற புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். அதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் புஷ்பா தி ரூல் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாஸில், தனுன்ஞ்ஜயா, ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

முன்னதாக புஷ்பா தி ரூல் படத்திலிருந்து ‘Where is pushpa’ என்ற முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய அளவு டிரெண்ட் ஆனது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  இந்நிலையில் படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் படத்தில் முக்கியமான ஷெட்டியூலை பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில் அவருடன்  நிறைவடைந்துள்ளது எனவும் விரைவில் அவர் பழியை தீர்க்க வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்தின் இறுதியில் என்ட்ரி கொடுத்து திரைப்படத்தை வேறு ஒரு தளத்திற்க்கு கொண்டு சென்ற ஃபகத் ஃபாஸில் தற்போது இரண்டாம் பாகத்தில் மிக முக்கியமான வில்லன் பாத்திரத்தில் வரவுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உற்சாகமடைய செய்துள்ளது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட் இணையத்தில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

 

A key schedule of #Pushpa2TheRule completed with 'Bhanwar Singh Shekhawat' aka #FahadhFaasil 💥💥

This time he will return with vengeance ❤️‍🔥🔥

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial @TSeries pic.twitter.com/xDOa82Ctc4

— Pushpa (@PushpaMovie) May 18, 2023

நடிகர் ஃபகத் ஃபாஸில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். தற்போது அவர் தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து அனுமான் கியர்ஸ், பாட்டு, தூமம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா  - Exclusive Interview இதோ..
சினிமா

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா - Exclusive Interview இதோ..

“இந்து மதத்திற்காக பேசி ரூ 40 கோடி வரை இழந்துள்ளேன்..” வைரலாகும் கங்கனா ரனாவத் பதிவு.. விவரம் உள்ளே..
சினிமா

“இந்து மதத்திற்காக பேசி ரூ 40 கோடி வரை இழந்துள்ளேன்..” வைரலாகும் கங்கனா ரனாவத் பதிவு.. விவரம் உள்ளே..