தளபதி விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இளைய திலகம் பிரபு அவர்கள், முன்னதாக சிலம்பரசன்.TR நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஐசரி.K.கணேஷ் அவர்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 23வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து அச்தி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த முன்னதாக வீரன் திரைப்படம் சமீபத்தில் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஹிப் ஹாப் ஆதியின் திரைப்பயமத்தில் 7-வது திரைப்படமாக தயாராகும் இந்த புதிய #HHT7 திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். மாதேஷ் மாணிக்கம் ஒழிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்யும் #HHT7 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

சமீபத்தில் பூஜையோடு தொடங்கப்பட்ட #HHT7 திரைப்படத்தில் ஒரு பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க, கதாநாயகியாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். மேலும் தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் இளைய திலகம் பிரபுவும் இணைந்துள்ளார் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

We are proud to share that Ilayathilagam Prabhu sir onboard for @VelsFilmIntl's #HHT7 starring & Music by @hiphoptamizha

Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/WofrhgzF95

— Vels Film International (@VelsFilmIntl) December 19, 2022