தனக்கென தனி பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தொடர்ந்து தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் வலம் வருகிறார்.

முன்னதாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அடுத்தடுத்து தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளிமயில் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தயாரித்து இசையமைத்து படத்தொகுப்பும் செய்கிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) கோடை வெளியீடாக ரிலீஸாக இருப்பதாக அறிவித்துள்ள படக்குழுவினர், படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் பிச்சைக்காரன் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

#ANTIBIKILI 👺#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
Satellite & Digital rights acquired by Star Network 🔴

Summer 2023 🔥@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS @mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute pic.twitter.com/w0YPShC1xy

— vijayantony (@vijayantony) December 20, 2022