தென்னிநதிய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹாரர் திரைப்படமான மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, உருவாகியுள்ள அடுத்த ஹாரர் படமான கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக தொடர்ந்து 99 நிமிடங்கள் ஓடக்கூடிய ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் நயன்தாராவின் கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்தும், கனெக்ட் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கனெக்ட் திரைப்படத்தின் கதைக்கரு குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும்போது, "கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று மிகுந்த யோசனைகளிலும் கவலையிலும் இருந்தேன். அந்த சமயத்தில், அந்த ஊரடங்கின் அனுபவங்களை ஹாரர் படமாக கொடுக்க எண்ணினேன். முன்னதாக வேறு ஒரு திரைப்படத்திற்கான ஆராய்ச்சியில் இருக்கும் போது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அந்த புத்தகத்தில் பேய் ஓட்டுபவர் மிகுந்த வயதானவராக இருந்தால் ஸ்கைப் காலில் பேய் ஓட்டப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை படிக்கும் போது யோசித்தேன் அதை என்னால் தற்போது தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது ஒருவேளை லாக் டவுனில் ஒருவருக்கு பேய் பிடித்தால் பேய் ஓட்டுபவர் நேரில் வந்து உதவ முடியாது. எனவே VIRTUALல் தொடர்பு கொண்டு பேய் ஓட்டுவது என்பது தான் இந்த படத்திற்கான முக்கிய பகுதியாக அமைந்தது. அதுதான் இந்த படத்தின் 3வது ACT.” என தெரிவித்தார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட அஸ்வின் சரவணனின் முழு பேட்டி இதோ…