தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள், முதல் முறையாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முன்னதாக வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக வெளியான, நடிகர் சிலம்பரசன்.TR பாடிய தீ தளபதி பாடலும் ஹிட்டடித்தது. தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தோடு வெளிவந்த ரஞ்சிதமே பாடல் லிரிக் வீடியோ வழக்கம் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரல் ஹிட் அடிக்க Youtube-ல் 100 மில்லியன் பார்வையாளர்களை தற்போது கடந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடலாசிரியர் விவேக், “ரஞ்சிதமே 100 மில்லியனை கடந்துள்ளது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும் நான் நன்றிகள் சொன்னால் போதாது... ஐ லவ் யூ சோ மச் டியர் விஜய் சார்… இதை தான் என்னால் சொல்ல முடியும்... இயக்குனர் வம்சி சார் மேன் ஆஃப் எனர்ஜி தமன் ப்ரோ, மானசி ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடன இயக்குனர் ஜானி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என தளபதி விஜயுடன் இருக்கும் புகைப்படத்தோடு இதனை பதிவிட்டுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் அந்தப் பதிவு இதோ…
 

As #Ranjithame hits a 100 M, can’t thank you enough sir for all the trust and love you showered on me. All i can say is love you sooo much dear @actorvijay sir😍

Thanks to @directorvamshi sir and the man of energy @MusicThaman bro, Manasi, Dop Karthik, Jani @SVC_official n team. pic.twitter.com/ljh6BfLR29

— Vivek (@Lyricist_Vivek) December 19, 2022