சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட மிரட்டலான சர்ப்ரைஸ்... பக்கா மாஸாக வந்த டைகர் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட டைகர் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ,rajinikanth in jailer movie tiger transformation ost video | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக டைகர் டிரான்ஸ்ஃபர்மேஷன் எனும் புது வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார் இத்திரைப்படத்தை சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்க இருக்கிறார். 

அதைத்தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 திரைப்படத்தை இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று செப்டம்பர் 11ம் தேதி சர்ப்ரைஸாக வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய நிலையில், இதர அறிவிப்புகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் வெளிவரவருக்கும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இமாலய வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ மற்றும் கார்களை பரிசளித்த கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் பணியாற்றிய 300 தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்தார். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைகர் முத்துவேல் பாண்டியன் டிரான்ஸ்ஃபர்மேஷன் OST வீடியோவை பட குழு தற்போது வெளியேத்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் - ஆக்சன் - ஸ்டைல் எல்லாம் நிறைந்த ஜெயிலர் திரைப்படத்தின் இன்டெர்வல் காட்சியின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளனர். பக்கா மாஸாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அந்த மாஸ் வீடியோ இதோ…