தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநாத்.தளபதி விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.அடுத்ததாக பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தினார் ஸ்ரீநாத்.

வேட்டைக்காரன்,12 பி,உள்ளம் கேட்குமே,பீமா,உன்னாலே உன்னாலே,சந்தோஷ் சுப்பிரமணியம்,மனம் கொத்தி பறவை,உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் ஸ்ரீநாத்.இவற்றை தவிர காதலிக்க நேரமில்லை என்ற விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரிலும் நடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் முத்திரை மற்றும் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களை இயக்கி தான் ஒரு பன்முகத்திறமை கொண்டவர் என்பதை நிரூபித்தார் ஸ்ரீநாத்.தொடர்ந்து நடித்து வரும் இவர் நட்புக்காக மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்தும் அசத்தியுள்ளார்.

காமெடி,குணச்சித்திர நடிகர்,இயக்குனர் போன்ற திறமைகளை நிரூபித்த ஸ்ரீநாத்,தற்போது புது அவதாரம் எடுத்துள்ளார்.ஜடா பட இயக்குனர் குமரன் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கும் ஆல்பம் பாடலில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.சீன் ரோல்டன் இசைமைத்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஃபிரேம்-பை-ஃபிரேம் நம்மை கவரும் ஸ்ரீநாத், பல புதிய பரிமாணங்களில் பட்டையை கிளப்ப கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்