தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தற்போது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். H.வினோத் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோரும் அஜித்துடன் வரிசையாக மூன்றாவது முறை இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதல்முறையாக அஜித் குமாருடன் இணைந்து AK61 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் தற்போது ஹெலிகாப்டர் இயக்கியுள்ளார். ஆம் பைலட்டாக மாறி அஜித்குமார் ஹெலிகாப்டர் இயக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#Ajithkumar turns a pilot and flies a helicopter 🚁 🤩#Ajith #AK61 pic.twitter.com/0DqyOFNC0d

— Galatta Media (@galattadotcom) September 13, 2022

Helicopter-ல் #AK 🚁 வானுயர பறக்கும் #AjithKumar #Ajithkumar𓃵 #Ajith #AK61 #AK pic.twitter.com/g3newCRS3T

— Galatta Media (@galattadotcom) September 13, 2022

MISSION #AK ! 🚁@SureshChandraa #AjithKumar #AK #AjithSir #AK61 pic.twitter.com/LePBcAZSci

— Galatta Media (@galattadotcom) September 13, 2022