தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றித் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

ஆல் டைம் ரெக்கார்ட்டாக 400 கோடிக்கு மேல் வசூலித்த விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத் ஜோஸ், ஜாஃபர், குமரவேல், சந்தானபாரதி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்களில் வந்து மிரட்டிய நடிகர் சூர்யா திரையரங்குகளை ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரவைத்தார்.கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்த விக்ரம் படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். அனிருத்தின் பாடல்கள் & பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. 

அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் விக்ரம் திரைப்படத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்து சென்றது. இதனிடையே விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது. இந்நிலையில் படக்குழுவினர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் 100 நாட்கள் கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோ இதோ…