மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பத்து தல படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

வருகிற டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிலம்பரசன்.TR இணைந்து நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு, சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

It's time to witness Love, Life, Action etc on @SilambarasanTR_ - @menongautham's #VendhuThanindhathuKaadu which is Censored with U/A.

Book your tickets now.@arrahman @VelsFilmIntl @IshariKGanesh @RedGiantMovies_ @Udhaystalin #VTKFromSep15 #JourneyOfMuthu pic.twitter.com/x2XThLcQdd

— Vels Film International (@VelsFilmIntl) September 12, 2022