தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமாக ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, சுல்தான் என நல்ல படைப்புகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்கிவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்காக அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் போலா திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த வரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் கணம். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழில் கணம் - தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம் என தயாராகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ள கணம் திரைப்படத்தில், அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்யும் கணம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

சயின்ஸ் ஃபிக்சன் எமோஷ்னல் படமாக கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கணம் திரைப்படத்திலிருந்து எமோஷனலான அம்மா வீடியோ பாடல் தற்போது வெளியானது. கணம் படத்தின் அம்மா வீடியோ பாடல் இதோ…