பொதுவா படம் ஷூட்டிங் ஆரம்ப காலத்துல ஒரு செட்ல எடுத்தாங்க அப்பறம் அது எதார்த்தமா இல்லைன்னு நிஜ இடங்கள்ல எடுக்க ஆரம்பிச்சாங்க.இப்படி பல இடங்கள்ல ஷூட்டிங் எடுத்து படங்கள் ஹிட் அடிக்க ஆரம்பிச்சது.இப்போ திரும்ப டெக்னாலஜி வளர்ச்சி அடைஞ்ச அப்பறம் பெரிய பட்ஜெட் படங்கள் GreenMat மூலமா Graphics,VFX செட்களை உருவாகிக்கிறாங்க.அப்படி இருந்தாலும் லைவ் லொகேஷன்ல எடுக்குற படங்கள் ரசிகர்கள் கூட ஈஸியா Connect ஆகுது.

அதோட சில இடங்கள்ல சில படங்கள் எடுக்கப்பட்டு பிரம்மாண்டமா வெற்றியும் அடைஞ்சுருக்கு ஒரு படம் அப்படி ஹிட் ஆகிட்டா அடுத்து அந்த Formula follow பண்ணி பல படங்கள் அங்க எடுக்கப்படும்.அப்படி தமிழ்நாட்டுல ஒரு லொகேஷன்ன்னு பாத்தீங்கன்னா அது மதுரை தான்.மதுரைல பல சூப்பர்ஹிட் படங்கள் சின்ன பட்ஜெட்ல எடுத்து ஹிட் அடிச்சுருக்கு.பல மாஸ் படங்களுக்கு மூலதனமா மதுரை இருந்துருக்கு.

அதே மாதிரி தமிழ்நாட்டை தாண்டி ஒரு ஸ்பெஷல் இடம்னா அது மும்பை தான்.மும்பை வரைக்கும் போய் ஷூட்டிங் போகணுமா அப்படினு யோசிச்ச ஒரு காலம் போய் , மும்பை போனாலே படம் ஹிட்ன்னு நிரூபிக்கிற மாதிரி பல படங்கள் வந்துருக்கு.மும்பை Backdrop-னாலே படம் கொஞ்சம் நல்லாருக்கும்ன்னு ரசிகர்கள் நம்பி தியேட்டருக்கு வருவாங்க

அப்படி பல நாயகர்களை மும்பை நம்ம தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி கொடுத்திருக்கு மும்பைன்னு சொன்னதும் நம்மளுக்கு டக்குன்னு நியாபகம் வர்றது நாயகன்,பாட்ஷா போன்ற படங்கள் தான்.மும்பைக்கும் நம்ம தமிழ் சினிமாவுக்கும் இருக்குற சில சுவாரசியமான Connection என்னென்ன அப்படிங்கிறது பத்தி இப்போ நம்ம பார்க்கலாம்

நாயகன்

மும்பை பேஸ் பண்ணி தமிழ்ல முதல் பெரிய படம் அதுவும் ஒரு டான் கதை , கமல்-மணிரத்னம் காம்போவுல உருவான இந்த படம் Cult Classic - ஆ இன்னும் பேசப்படுது.இந்தியாவுல உருவாகுற பல டான் படங்களுக்கும் இந்த படம் ஒரு Inspiration.இந்த படத்தோட வெற்றி பல படங்கள் அடுத்து மும்பைல எடுக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தை ஏற்படுத்துச்சு.

பாட்ஷா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்சு வெளியான பாட்ஷா படம் பம்பாய் மையமா வெச்சு எடுக்கப்பட்டது.செம மாஸான இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் செம ஹிட் அடிச்சது.தமிழ் சினிமாவோட மார்க்கெட்டை பெரிய அளவுல உயர்த்தின பெருமை இந்த படத்துக்கு இருக்கு.இன்னைக்கும் பாட்ஷா மாதிரி மாஸா ஒரு படம் எடுக்கணும்னு பலரும் ஆசைப்படுறாங்க

பம்பாய்

வெவ்வேறு மதங்களை சேர்ந்த ரெண்டு பேர் கல்யாணம் பண்ணி பம்பாய்ல செட்டில் ஆகி அங்க நடக்குற மத கலவரலங்கள்ல எப்படி பாதிக்கப்படறாங்க அப்படின்னு எதார்த்தமா எடுக்கப்பட்ட படம் , இந்த படம் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை வாங்கியிருந்தது

ரிதம்

மும்பைல நடக்குற கணவனை இழந்த ஒரு பொண்ணுக்கும் , மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் நடக்குற ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி.செம Feel Good படமா ரசிகர்களின் மனம் கவர்ந்து வெற்றி அடைஞ்சது இந்த படம்

மங்காத்தா

மும்பைல நடக்குற கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்தும் அதை கொள்ளையடிக்கிற ஒரு கூட்டத்தை பத்தியும் எடுக்கப்பட்ட படம்.அஜித்தோட 50ஆவது படம் , புது லுக்ல Negative Shade-ல அஜித் வர பெரிய எதிர்பார்ப்புல இருந்தது.ரசிகர்கள் எதிர்பார்ப்பை அடிச்சு நொறுக்கி எல்லார் மத்திலயும் செம ஹிட் அடிச்ச படம்.அஜித் திரை வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு படமா இந்த படம் அமைஞ்சது.

துப்பாக்கி

லீவுக்கு வர ஒரு ஆர்மி ஆபிஸர் மும்பைல இருக்குற தீவிரவாதிகளை அழிக்க எடுக்குற முயற்சி தான் இந்த படம்.தமிழ் சினிமாவுலயும் இப்படி எல்லாம் படம் எடுக்க முடியும்னு சவால் விட்ட ஒரு படம்.முருகதாஸ் இயக்கத்துல தளபதி விஜயோட சினிமா வாழ்க்கைல மிக முக்கியமான ஒரு படம், விஜய் பட்டி தொட்டி எல்லாம் செம ஹிட் அடிச்சு வசூல்ல பெரிய சாதனை பண்ண ஒரு படம்.

ஓகே கண்மணி

மும்பை இருக்குற தமிழ் Youngsters , இந்த காலத்துக்கு Adopt ஆகுற மாதிரி Live In கான்செப்ட் வெச்சு எடுக்கப்பட்ட ஒரு அழகான ரொமான்டிக் படம்.பலருக்கும் இந்த படம் செம Favourite-ஆ இருக்குது

வெந்து தணிந்தது காடு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் TR நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் சில நாட்கள்ல ரிலீஸ் ஆகப்போகுது.இந்த படமும் மும்பை Base பண்ணி எடுக்கப்பட்டிருக்க ஒரு படம் தான்.இது எப்படி இருக்குன்னு சில நாட்கள்ல பார்க்கலாம்

பல வெற்றிப்படங்களுக்கு உறுதுணையா இருந்த மும்பை அடுத்து வெளியாகுற வெந்து தணிந்தது காடு படத்துக்கும் ஹெல்ப் பண்ணுதா அப்டிங்கிறதை நம்ம பொறுத்திருந்து தான் பாக்கணும்.இது இங்கயோட முடியாம இன்னும் மும்பை Base பண்ணி தமிழ்ல நிறைய வெற்றி படங்கள் வரணும்னு தமிழ் சினிமா ரசிகரா ஆசைப்படறோம்