வருடா வருடம் திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டு வந்தன.நாடு முழுவதும் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து தேசிய விருதுகள் அறிவிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.300க்கும் மேற்பட்ட படங்கள் இந்த 68-ஆவது தேசிய விருது போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன.அதற்கான முடிவுகளை தற்போது தேசிய விருது குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்கள் பல விருதுகளை அள்ளி குவிந்துள்ளன.தமிழில் விருதுகளை வென்றுள்ள படங்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்

  • சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த பின்னணி இசை - ஜீ வி பிரகாஷ் குமார் ( சூரரைப் போற்று )
  • சிறந்த படத்தொகுப்பு  - ஸ்ரீகர் பிரசாத் ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் )
  • சிறந்த திரைக்கதை  - ஷாலினி உஷா நாயர் , சுதா கொங்கரா( சூரரைப் போற்று )
  • சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் )
  • சிறந்த படம் - சூரரைப் போற்று
  • சிறந்த வசனம் - மடோன் அஷ்வின் ( மண்டேலா )
  • சிறந்த அறிமுக இயக்குனர் - மடோன் அஷ்வின் ( மண்டேலா ) 
  • சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி ( சூரரைப் போற்று )
  • சிறந்த நடிகர் - சூர்யா ( சூரரைப் போற்று )

இந்த வருடம் மொத்தம் 10 விருதுகளை தமிழ் சினிமா அள்ளியுள்ளது.வெற்றி பெற்ற அனைவருக்கும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்