தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக சீயான் விக்ரமுடன் முதல்முறை இணைந்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் #CHIYAAN61 புதிய திரைப்படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. பிரிட்டிஷ் கால கட்டத்தில் KGF-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 1970-80களில் சென்னையில் பிரபலமான ஆங்கில குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஆண்டு (2021) நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.

தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் ஓராண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் பிரத்தியேகமான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான சார்பட்டா பரம்பரை மேக்கிங் வீடியோ இதோ…