நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அந்த வகையில் தொடர்ந்து தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் காட்டேரி, பாம்பன், கலர்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் சிறந்த நடிகையாக வலம் வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நந்தமூரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் NBK107, சமந்தா நடிப்பில் PAN INDIA படமாக தயாராகும் யசோதா மற்றும் ஃபேண்டஸி அட்வென்சர் படமான ஹனுமன் ஆகிய திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பாதிக்கப்பட்டதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தார். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், 

"கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து விட்டேன். எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவரின் அன்பிற்கும் நன்றி. தயவு செய்து அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அனைவரது மெசேஜ்களையும் பார்த்தேன் மிக்க நன்றி... தற்போது எனது பொய்க்கால் குதிரை படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக கிளம்பிவிட்டேன்."  

என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்ட அந்த வீடியோ இதோ…
 

Woohoooo... never been so happy to be #Negative finally... pic.twitter.com/d6ZeBdTIsj

— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) July 22, 2022