சென்னை வசந்த் & கோ வில் நடைபெற்ற அதிநவீன AC அறிமுக விழா.. விஜய் வசந்த் M.P, தங்கமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வசந்த் & கோ வில் நடைபெற்ற அதிநவீன AC அறிமுக விழா.. விஜய் வசந்த் M.P, தங்கமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - Daily news

உழைப்பால் உயர்ந்த வசந்த் & கோ கடந்த 45 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை சேகரித்து உலகம் முழுவதும் தன் புகழை வளர்த்து கொண்டு இன்று ‘இந்தியாவின் நம்பர் ஒன் டீலராக’ உயர்ந்துள்ளனர். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறுக சிறுக மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது தனக்கென்ற மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளது. தவணைத் திட்டத்தில் பொருள்கள் விற்பனை செய்வதும், விற்பனைக்குப் பிந்தைய சேவை போன்றவற்றை முன்னெடுத்து அனைத்து மக்களுக்கும் அனைத்தும் அவர்கள் எதிர்பார்ப்பின் அவர்களின் சௌகாரியத்தில் கிடைத்திட அயராது உழைத்த நிறுவனம். எளிய மக்களிடமும் அவர்கள் விருப்பபடி அனைத்தும் வந்து சேர வேண்டும் என்பதற்காக நிறைய திட்டங்களை முன்னெடுப்பதும் புதுமையான அதி தொழில்நுட்ப உபகரணங்களையும் மக்களுக்கு கொண்டு வர இன்றும் தொலைநோக்கு பார்வையில் உழைத்து கொண்டிருப்பது நம் வசந்த் & கோ நிறுவனம்.

காலத்தால் அழியா புகழ் பெற்ற இந்த வசந்த் & கோ-விற்கு உயிர் மூச்சாய் உழைத்த மாமனிதர் வசந்தகுமார் அவர்களின் மறைவுக்கு பின்னர், விஜய் வசந்த் M.P., அவர்கள், வினோத்குமார் மற்றும் தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் ஒன்றிணைந்து வசந்தகுமார் அவர்கள் வகுத்த பாதையில் தடம் மாறாமல் பயணித்து, மக்களுக்கான நம்பிக்கையை மேலும் அதிகரித்து, மக்களுக்கு தேவையான புதுமைகளையும் தொழில்நுட்பங்களையும் தேடித் தேடி சென்று சேர்த்து வருகிறார்கள். 

 


இந்நிலையில் எல். ஜி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான டுயூவல் கூல்  ஏர் கண்டிசனர் அறிமுக விழா சென்னை நார்த் உஸ்மான் சாலையில் உள்ள வசந்த் & கோ கிளையில் இன்று நடைபெற்றது இதில்  வசந்த் & கோ நிர்வாக இயக்குனர்கள் விஜய் வசந்த், எம். பி, மற்றும் தங்கமலர் ஜெகநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எல். ஜி நிறுவனத்தின் இந்திய பொது மேலாளர் ஹாங் ஜு ஜியோன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அதிநவீன வசதி கொண்ட புதிய ஏர் கண்டிஷனர் கருவியை அறிமுகப்படுத்தினார்.

 

அதனை தொடர்ந்து வசந்த் & கோ கிளையில் வைக்க பட்டிருந்த எல். ஜி நிறுவன தயாரிப்பு பொருட்கள் ஹாங் ஜு ஜியோன் பார்வையிட்டார்.  இந்த நிகழ்ச்சியில் எல். ஜி நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி சுதிர், மண்டல தலைமை தொழில் அதிகாரி கே எல் முரளி, வசந்த்& கோ நிர்வாகி சண்முகம் மற்றும் எல். ஜி நிறுவனத்தின் முக்கிய விற்பனை பிரதிநிதிகளும் வசந்த் & கோ கிளை மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Comment