விஜய் ரசிகர்களுக்கு Special treat.. வெளியானது அட்டகாசமான ‘வா தலைவா’ பாடல்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியானது வாரிசு படத்தின் வா தலைவா பாடலின் வீடியோ - Varisu Va thalaiva video song released | Galatta

விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘வாரிசு. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் குடும்ப உணர்வை மையப்படுத்தி வெளியான திரைப்படம் வாரிசு. பொங்கல் விடுமுறையையொட்டி வெளியான இப்படம் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று இன்றுவரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்திற்கு வாரிசு படத்திற்கு ஒளிப்பதிவாளர்  கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.KL படத்தொகுப்பு செய்தார். மேலும்  தமன்.S  இசையில் பாடல்கள் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உலகளவில் பெரும் ஆதரவினை பெற்ற வாரிசு திரைப்படம் வெளியாகி 25 நாள்களில் உலகளவில் 300 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர், இந்நிலையில்  வாரிசு படத்தில் முதல் பாடலாக இடம் பெற்றிருந்த ‘வா தலைவா பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமன் இசையில் சங்கர் மகாதேவன், கார்த்திக், தமன்  உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக படத்திலிருந்து ‘ஜிமிக்கி பொண்ணு, தீ தளபதி, ‘Celebration of Varisu’, ‘soul of varisu’, ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகியது. அதன் படி படத்தில் இருந்த அனைத்து பாடலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து விஜயின் வாரிசு முதல் இயக்குனர் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படம் வரை அப்டேட்டுகள் குவிந்த நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

“அனைவரும் திருப்தியடையும் படம் என்று ஒன்று இல்லை” மைக்கேல் பட விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி.. – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அனைவரும் திருப்தியடையும் படம் என்று ஒன்று இல்லை” மைக்கேல் பட விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி.. – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

“இந்த உடம்ப வெச்சிட்டு என்னால நடிக்க முடியல”.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்  - ஃபர்ஸி குழுவினருடன் சிறப்பு  பேட்டி இதோ..
சினிமா

“இந்த உடம்ப வெச்சிட்டு என்னால நடிக்க முடியல”.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - ஃபர்ஸி குழுவினருடன் சிறப்பு பேட்டி இதோ..

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..