ஹன்சிகாவின் கலாட்டா கல்யாணம்.. வெளியானது ‘லவ் ஷாதி டிராமா’ டிரைலர் - இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..

வெளியானது ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி டிரைலர் - Hansika motwani marriage special show trailer is out now | Galatta

நட்சத்திரங்கள் கோலாகலமாக திருமணம் செய்வது வழக்கம் தான். இந்தியாவில் சமீபத்தில் கத்ரீன கைப் – விக்கி தம்பதியினர், ரன்பீர் கபூர் – ஆலியா பாட் தம்பதியினர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் என்று வரிசைக்கட்டி சொல்லலாம். அவர்கள் திருமண நிகழ்வுகளை எல்லாம் தொலைகாட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பிற்கு விற்பனை செய்து பார்வையாளர்களுக்கு கொடுக்கவும் செய்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு பிரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் படி தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா சமீபத்தில் தனது நண்பரும் தொழிலதிபருமான சொஹைல் கட்டுரியாவை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட திருமணத்தை தற்போது நிகழ்ச்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘ஹன்சிகாவின் லவ் ஹாதி டிராமா’ என்ற பெயரில் வரும் பிப்ரவரி 10ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடருக்கு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்  தமிழில் குரல் கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த நிகழ்ச்சிக்கான டீசர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சியின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான ஒப்பனைகளுடன் ஹன்சிகா சொஹைல் திருமணம் பல முன்னேற்பாடுகளுடன் நடைபெற்றதை சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் டிரைலர் தற்போது ரசிகர்களால் கவரப்பட்டு இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 'எங்கேயும் காதல்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'மான் கராத்தே', 'அரண்மனை' உள்ளிட்ட பல  முக்கிய படங்களை நடித்தார். மேலும் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகருடனும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரானார் ஹன்சிகா  படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி', 'கார்டியன்', 'பார்ட்னர்', '105 மினிட்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  மேலும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'MY3' எனும் வெப்சீரிஸிலும் ஹன்சிகா நடித்துள்ளார். விரைவில் இந்த வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“இந்த உடம்ப வெச்சிட்டு என்னால நடிக்க முடியல”.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்  - ஃபர்ஸி குழுவினருடன் சிறப்பு  பேட்டி இதோ..
சினிமா

“இந்த உடம்ப வெச்சிட்டு என்னால நடிக்க முடியல”.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - ஃபர்ஸி குழுவினருடன் சிறப்பு பேட்டி இதோ..

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“நான் Pan - India Star இல்லை” சுவாரஸ்மான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி! - வைரலாகும் வீடியோ இதோ..

தளபதியின் வெறித்தனமான ஆட்டம் இனி வைரல்.. வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ -  ரசிகர்கள் கொண்டாட்டம்.. துள்ளலானா வீடியோ சாங் இதோ..
சினிமா

தளபதியின் வெறித்தனமான ஆட்டம் இனி வைரல்.. வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ - ரசிகர்கள் கொண்டாட்டம்.. துள்ளலானா வீடியோ சாங் இதோ..