கைலாசா நாட்டுக்கு வர விரும்புவர்களுக்கு மூன்று நாள் இலவச விசா வழங்குவதாக நித்யானந்தா பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


 இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா நாட்டை உருவாகி பின் கைலாசா மத்திய வங்கி, கைலாசா நாணயம் என ஒவ்வொன்றாக அறிவித்து வந்த நித்யானந்தா தற்போது கைலாசாவில் தங்கும் மூன்று நாட்களும் இலவச உணவு, தங்குமிடம் போன்றவை வழங்கப்படும் என்றும், கைலாசாவுக்கு வருகைதர விரும்புவோர்  மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் நித்யானந்தா அறிவித்திருக்கிறார்.


” கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் தங்களின் முழுத்தகவல்களுடன், 3 நாட்கள் இலவச விசாவுக்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் கைலாசா வரவிரும்புவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து கருடா எனப்பெயரிடப்பட்டுள்ள தனி விமானங்கள் மூலமாக இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.  மூன்று நாட்களுக்கு விசா இலசவம் என்றும் கூறியிருக்கிறார். 


கைலாசா என்ற நாட்டை நித்யானந்தா உருவாகியதற்கு எந்த ஒரு அதிகார பூர்வ ஆதாரமும் இன்று வரை இல்லை. சைபர் க்ரைம் முதல் இன்டர்போல் முயற்சித்தும் நித்யானந்தா பற்றின எந்த  தகவலும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.  

ஆனால் தான், ஒரு நாட்டை உருவாகி இருக்கிறேன் , நாணயத்தை வெளியிட்டு இருக்கிறேன் என்று தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் நித்தியானந்தா தற்போது தனி விமானம் மூலம் அந்த தீவிற்கு அழைத்துச் செல்லப்படும் என்று கூறுகிறார்.