அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழ்க்கில்  சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்  தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில்சுப்ரீம் கோர்ட்  இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் கவர்னர்  செய்த கால தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது கவர்னர்  முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பேரறிவாளன் இன்று அண்ணா நகரில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம்  பேசிய வைகோ கூறியதாவது: பேரறிவாளனுக்கு தூக்கு  என்ற உடன் நேரடியாக வேலூர் சிறைக்கு சென்று அவரை மிகுந்த நம்பிக்கை உடன் இருக்க சொல்லி தெரிவித்தேன். இளமை காலம் முதலே எங்கள் வீட்டிக்கு வருபவர் பேரறிவாளன். அவர் நிரபராதி அவருக்கு  விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது அம்மா அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்ளார். பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.

மேலும் அவர் எந்த குற்றமும் செய்யாதவர் இதில் நீதி வென்றது. அவர் வாழ்வு மற்றும் இளமை காலம் அழிந்து விட்டது. யாராக இருந்தாலும் சோர்ந்து போய்டுவார்கள். ஆனால் எமன் வாயில் இருந்து தன் மகனை மீட்டு உள்ளார் அற்புதம்மாள். அதனை தொடர்ந்து பேரறிவாளன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் சிறைக்கு போகும் முன்பே வைகோவை சந்தித்து உள்ளேன். பொடா  காலத்தில் வைகோ அண்ணணுடன் இருந்த போது அது ஒரு மகிழ்ச்சியான தருணம்.. தூக்கு என்ற போது எங்களுக்காக அத்வாணி மற்றும் வாஜிபாயியிடன் மனு கொடுத்தார்.எங்களுக்கு தூக்கு என்று அறிவித்த போது ராம்ஜித்மலாணி  இந்த வழக்கில் வந்த போது தான் இந்த வழக்கு மாற்றத்தை அடைந்தது.. அவர் வந்ததுக்கு முழு காரணம் வைகோ தான் என்று தெரிவித்தார்.