தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த டான் திரைப்படம் கடந்த மே 13ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரியங்கா மோகன்,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,பாலசரவணன்,மிர்ச்சி விஜய்,சிவாங்கி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த படம் தெலுங்கிலும் காலேஜ் டான் என்ற பெயரில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முக்கிய படக்குழுவினர் பங்கேற்று படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் அடுத்த சூப்பர்ஸ்டார் என கோஷமிட அவர்களை அமைதியாக இருக்க சொன்ன சிவகார்த்திகேயன் எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை SK என்று அன்புடன் நீங்கள் கூப்பிடுவதே போதும் என தெரிவித்தார்,அத்துடன் ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா டயலாக்கை பேசி அசத்தினார் சிவகார்த்திகேயன்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்