துணை நடிகை ஒருவர் கூலிப்படையை ஏவி விட்டதால், புது மாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களைப் போல் நிகழ்ந்து உள்ள இந்த சம்பவம், தமிழகத்தில் அதுவும் கள்ளக்குறிச்சியில் தான் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த செரீப் அகமது என்பவரின் மகன் 29 வயதான ரியாஸ் அகமதுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது.

புத்தம் புது மாப்பிள்ளையான 29 வயதான ரியாஸ் அகமது, கடந்த 30 ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரது இருசக்கர வாகனம் ஏமப்பேர் புறவழிச் சாலை வழியாக வந்துக்கொண்டிருந்ததார். கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபம் 
எதிரே அவர் வந்துகொண்டிருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், ரியாஸ் அகமதுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதில், படுகாயம் அடைந்த 29 வயதான ரியாஸ் அகமது, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு படுகாயம் அடைந்த ரியாஸ் அகமது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு 
வருகிறது. 

மேலும், இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜஹாங்கீர் மனைவியான சினிமா துணை நடிகையான நஸ்ரின், இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் “3 லட்சம் ரூபாய் கடனை ரியாஸ் அகமது, அந்த பெண்ணிடம் பெற்று இருந்ததும், அந்த கடனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் அவரை, சினிமை துணை நடிகை நஸ்ரின் கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதும், தெரிய வந்தது. 

அத்துடன், சினிமை துணை நடிகை நஸ்ரினுக்கு கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்த நஸ்ரினின் சக தோழிகளான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அயாத்பாஷா மனைவி அயாத்பீ, அவரது தங்கை பஷீரா ஆகியோரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் பேரில், கூலிப்படையைச் சேர்ந்த பஷீராவின் கணவர் அரிகிருஷ்ணன் உள்பட 4 பேரை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சினிமை துணை நடிகை நஸ்ரினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, துணை நடிகை ஒருவர் கூலிப்படையை ஏவி விட்டு, புது மாப்பிள்ளையைக் கொலை செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.