தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.தனது வித்தியாயசமான கதைத்தேர்வின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கஇடம்பிடித்தவர்.அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி 28 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக ஜெயம் ரவியின் 25ஆவது படமான பூமி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்திருந்தார் ஜெயம் ரவி.

இவர் அடுத்ததாக ஸ்க்ரீன் சீன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஜெயம் ரவி 28 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பூலோகம் பட இயக்குனர் கல்யாண் இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இதில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.