உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீக்காத நிலையில் , உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 8500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 


பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு தான் ஏற்பட்டு இருக்கிறது என அரசு தரப்பில் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 உலக நாடுகள், பிரிட்டனுடனான  விமான போக்குவரத்தை தடை செய்து வைத்துள்ளது. பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி , நெதர்லாந் போன்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. மேலும் ஓமான், சவுதி போன்ற நாடுகள் எல்லையை மூடிவிட்டனர். இன்னும் சில நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.


கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சி பணிகள் இன்னும் முழுமையடையாத சூழலில், தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகள் உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துமா என்று ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளது. 


இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தை தொடர்ந்து இப்போது  கர்நாடகாவில் உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரங்கு அமல்படுத்த உள்ளது. தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.