பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வித்யாசமான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. வழக்கம் போல இதிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இந்த வாரம் B for Ball, C for Catch என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக கார்டனில் ஒரு செட்டப் வைக்கப்பட்டு இருந்தது. அதில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும் என்றும், அதில் 5,10,20 மதிப்பெண்கள் என பந்தின் அளவை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். பந்து கீழே விழுந்துவிட்டால் அதற்கு முதல் சுற்றில் மதிப்பெண் இல்லை. இந்த டாஸ்க் நடக்கும்போது சண்டை வராமல் இருக்க இரண்டு அணிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய நடுவில் ஒரு டேப் ஓட்டினார் பாலாஜி. 

கேமை நேர்மையுடன் விளையாட இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு விளையாட துவங்கினர். இரண்டு அணிகளும் ஒப்புக்கொண்டு நடுவில் ஒரு மார்க் வைத்து Fair ஆகி விளையாடலாம் என ஆரம்பித்தனர். ஆனால் அதனாலேயே இரண்டு அணிகளுக்கும் நடுவில் பிரச்சனை எழுந்தது. அவர் தள்ளிவிட்டார், இவர் இடித்துவிட்டார் என தொடர்ந்து பஞ்சாயத்து நடந்தது. இரண்டு அணிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டனர். 

முதல் சுற்றில் பந்துகளை நேராக பிடித்தால் மட்டும் தான் பாயிண்ட் என சொல்லப்பட்டது. கீழே விழுந்தால் அதற்கு புள்ளி இல்லை என சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது சுற்று தொடங்கியது. அதில் கீழே விழும் பந்துகளுக்கும் மார்க் என சொல்லப்பட்டது. அதனால் இனி கீழே விழுந்த பந்தை எடுப்பதற்கு சண்டை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அவர்களுக்கு உள்ளேயே ஒரு விதியை போட்டுக்கொண்டனர். இப்படி இரண்டு அணிகளும் விளையாடி கொண்டு இருந்த பொது சோம் மற்றும் ஆரி இடையே வாங்குவாதம் வெடித்தது. 

அடுத்து புதிய சுற்று தொடங்கியபோது ரெட் பந்துகளை பிடித்தால் அல்லது தொட்டால் அந்த அணியின் மதிப்பெண்கள் பூஜ்யம் ஆக்கப்படும் என விதி போடப்பட்டது. முதல் சிவப்பு பந்தை பாலாஜி தொட்டுவிட்டதனால் அவர் அணியின் மதிப்பெண் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டது. அதன் பின் இந்த டாஸ்க் இரவு முழுவதும் நடக்கும் என பிக் பாஸ் அறிவித்ததால் அனைவருக்கும் ஷாக் ஏற்பட்டது. இரண்டு அணியினரும் வெளியில் வந்து படுத்துவிட்டனர். ரியோ டீம் வெளியில் தூங்கி கொண்டு இருந்தபோது பாலாஜி டீம் அங்கு ஜாலியாக பாட்டு பாடி, காமெடி செய்து கலகலப்பாக இருந்தனர். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தூங்கிக்கொண்டிருந்த சோம் டாஸ்க் வரும் தருணத்தில் ஓடிச் சென்று பந்தை பிடிக்கிறார். LED-யில் போட்டியாளர்களின் பெயர் வந்துகொண்டிருக்க, பந்தை பிடிக்கச்செல்கின்றனர். ரம்யா பந்தை யார் பிடித்தது என்ற புதிய பிரச்சனையும் கிளம்புகிறது.