விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா இறந்த நிலையில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் காவியா அறிவுமணி நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.சிலர் முல்லை கதாபாத்திரத்தை அப்படியே முடித்துக்கொள்ளவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சித்ராவின் எபிசோடுகள் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்திருந்தது.சித்ராவின் எபிசோடுகள் நேற்றுடன் முடிந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சீரியல் குழுவினர் விளக்கம் தெரிவித்துள்ளனர்.இன்றைய எபிசோடில் புதிய முல்லையாக காவியா என்ட்ரி கொடுத்துள்ளார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

A post shared by Tellycelebs (@tellycelebss)