கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார் சிம்பு. சிம்புவின் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். தற்போது சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த சுவையூட்டும் செய்தியை கொண்டாடி வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள். 

கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர். அதே படத்தினை தான் நம் ஊருக்கு ஏற்றது போல மாற்றி ரெடி செய்தார் இயக்குனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளாராம். 

நாளை 24ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். கேப்டன் ஆப் தி ஷிப், அதாவது இயக்குனர் கிருஷ்ணா சிம்புவை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது என்றும், ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அப்டேட்டை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா கூறியிருந்தது. 

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த வாரம் தொடர்ந்து சிம்பு படம் பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலும் நம் செவிகளுக்கு எட்டியது குறிப்பிடத்தக்கது.