குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

tnpsc

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் , நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

மேலும்  5,831 காலி பணியிடங்களுக்கான  குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துயிருந்தது. தேர்வுக்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் இன்று வெளியானது.

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை சென்னை பிராட்வே தலைமையகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து , குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ந் தேதி சனிக்கிழமை நடைபெறும். தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெற உள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில் எழுதலாம். அதன்படி, தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.  இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதில் 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டும். முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும். டிஎன்பிஎஸ்சி தேர்வு இனி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கு பதில், காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.