தனது ஸ்டைலான நடந்தாலும் தனக்கே உரித்தான இயல்பான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர் பிரபுதேவா இந்திய சினிமாவின் பிளாக்பஸ்டர் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இதனிடையே நடிகராக பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் பிரபுதேவா நடித்துள்ள பஹீரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஃபேன்டசி நகைச்சுவை திரைப்படமாக மை டியர் பூதம், ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை மற்றும் ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகின்றன.

முன்னதாக அடுத்து பிரபுதேவா நடிக்கும் அதிரடித் திரைப்படமான ரேக்ளா திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அறிமுக இயக்குனர் சாம் ஜோடிக்ரூஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள புதிய படத்திற்கு முஸாஸி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் முஸாஸி படத்திற்கு பிரசாத்.S.N இசையமைத்துள்ளார். ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்நிலையில் முஸாஸி திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…