சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு வெளியிட்ட ட்ரெண்டிங் புகைப்படம்!
By Anand S | Galatta | February 17, 2022 17:56 PM IST
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக களம் இறங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், ஹீரோ என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து படிப்படியாக தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆன நிலையில், வருகிற மார்ச் 25ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே முன்னதாக ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள அயலான் திரைப்படத்திற்கு, இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார்.நீரவ்ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 17ஆம் தேதி) அயலான் படக்குழுவினர் சிவகார்த்திகேயனின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். ட்ரெண்டாகும் அயலான் பட புதிய போஸ்டர் இதோ…
Happy birthday dear @Siva_Kartikeyan brother💐💐
— Ravikumar R (@Ravikumar_Dir) February 17, 2022
Wishes from Team #Ayalaan#HappyBirthdaySivakarthikeyan #HBDSivakarthikeyan
@kjr_studios @arrahman #rakulpreet #niravsha @muthurajthangvl @AntonyLRuben @phantomfx_india @24AMSTUDIOS pic.twitter.com/HdUBvPE5uE