சத்தியாவனிமுத்து நகர் பகுதியில் உள்ள கரையோர மக்களின் வீட்டை வலுக்கட்டாயமாக இடித்துள்ளது தமிழக அரசு. இதனால் அப்பகுதி மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

2015 வெள்ளம் ஏற்பட்டபோதிலிருந்து கரையோர மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது.  2005 ஆம் ஆண்டு சத்தியவானி முத்துநகரில்  குடிசைமாற்று வாரிய புள்ளிவிவரப்படி  மொத்தம் 3685 குடும்பங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அப்போதிலிருந்தே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அப்போது இருந்த அரசாங்கள் முற்பட்டது.

இதன்படி கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி அப்போதைய குடிசைமாற்றுவாரிய அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன்  கையெழுத்திட்ட கணக்கின்படி 1112 வீடுகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் 29 ம் தேதியே வீடுகளை இடிக்க முற்பட்டபோது பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அது தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் கொரோனா காலத்தில் போலீஸால் மிகப்பெரிய நெருக்கடிக்கடிக்கு ஆளாக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது மிஞ்சியிருக்கும் 350 குடும்பங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி கேட்கும் பொழுது ஏற்கனவே அவர்களுக்கு வீடு கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்குள்ள மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மனுவாக நவம்பர் 4 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை பெறவில்லை என்றும் எங்களுக்கு வீடு கொடுத்துவிட்டதாக அரசு தரப்பில் பொய்யான தகவல் தருவதாகவும் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசார்ப்பதற்கு முன்பாகவே  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்வு காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் இருந்த 15 பேர் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். கூவம் ஆற்றில் இருந்தவர்களை மீட்காமல் அவர்கள் கண்முண்ணே வீடுகளை வலுக்கட்டாயமாக இடித்து தள்ளினர். 

வெள்ளத்தால் பாதிக்கபப்டுவதாக கூறி கரையோரத்தில் இருக்கும் மக்களை வேறு இடங்களில் தங்க வைப்பதாகக் கூறி குடிசைமாற்று வாரியம் அறிவித்த வீடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் போலியான ஆதார்கார்டுகள் மூலம் மாற்று நபர்கள் குடியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த நெருக்கடியான கொரோனா காலக்கட்டத்தில் வீடுகளின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு தரப்பில் மாற்று ஏற்பாடு விரைவில் செய்து தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.