70-வது நாளை தொட்டுள்ளது பிக்பாஸ் சீசன் 4. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சில போட்டியாளர்கள் குரூப்பாக விளையாடுவது பற்றி கமல் கோபத்துடன் பேசினார். அதன் பின் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. சோம் சேகர் ஸ்டேட்டஸ் பற்றி பேசியதாக நிஷா மீது அவர் கோபப்பட்டார்.

அதனால் அதிர்ச்சியான நிஷா இனி நான் உன்னிடம் ஜோக் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு சென்று பெட்டில் படித்து அழுதுகொண்டிருந்தார். நிஷாவுக்கு ஆதரவாக அர்ச்சனா பேச தொடங்கினார். கேபி பேசும்போது சும்மா இருக்கும் சோம் ஏன் நிஷா அப்படி பேசினால் மட்டும் கோபம் அடைகிறார் என கேட்டார்.

சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றுகிறார், டாஸ்கில் சிறப்பாக திட்டம் போட்டார் என பாலாஜியை பாராட்டினார் கமல். மேலும் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் பிக் பாஸ் flip செய்து மாற்றியது பற்றியும் கமல் பேசினார். ஜித்தன் ரமேஷ் கேப்டனாக எவ்வாறு செயல்பட்டார் என கமல் கேட்க தொடங்கினர். அவர் தன் பொறுப்புகளை vice கேப்டன் நிஷாவிடம் கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்தார் என பலரும் குற்றச்சாட்டை வைத்தனர். 

10 வாரம் ஆகிவிட்டது. பல வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமல் அட்வைஸ் கொடுத்தார். நிஷாவை அடுத்து விளாச தொடங்கினார் கமல். நான் கொடுத்த ஊக்கத்தை தவறாக எடுத்துக் கொண்டீர்கள். இதற்கு முன் அர்ச்சனா சொன்ன personal விஷயத்தை இதில் தவறாக பயன்படுத்திக் கொண்டீர்கள் என நிஷாவை தாக்கி பேசினார் கமல். மேலும் தெரியாமல் செய்துவிட்டேன் என நிஷா சொன்ன காரணத்தையும் கமல்ஏற்றுக் கொள்ள வில்லை. யோசிக்காமலா இப்படி ஒரு யுக்தியை பயன்படுத்தினீர்கள் என விளாசினார் கமல்.

கமல் முன்பு கூறியது போலவே இன்றே ஒரு எலிமினேஷன் நடைபெற்றது. அதை சற்று வித்யாசமாக கமல் செய்தார். சோமை ஸ்டோர் ரூமிற்கும், ரமேஷை கன்பெக்ஷன் ரூமிற்கும் அனுப்பினார் கமல். இதில் ஒருவர் நேராக வெளியே வந்துவிடுவார் என்றும், மற்றொருவர் உள்ளே வருவர்வ் என்றும் கூறினார் கமல். அதன்படி ஜித்தன் ரமேஷ் வெளியே அனுப்பப்பட்டார். அர்ச்சனா மட்டும் கதறி அழுதார். அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் அப்படியே வெளியில் வந்த நிலையில் அவரை அகம் டிவி வழியே பேச வைத்தார் கமல்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ரம்யா, ஷிவானி, நிஷா, கேப்ரியலா மற்றும் சோம் ஆகிய 5 பேர் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் அதில் இருந்து யார் காப்பாற்றப்பட வேண்டும் என கமல் கேட்கிறார். அப்போது ஷிவானியின் பெயரை ரியோ மற்றும் பாலாஜி ஆகியோர் கூறுகின்றனர். 

நிஷா போகனும் என கேபி சொல்கிறார், ஆனால் அவர் இருக்க வேண்டும் என அனிதா விருப்பப்படுகிறார். இதில் யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது இன்று இரவு ஷோ ஒளிபரப்பாகும் போது தெரியவந்துவிடும். வந்திருக்கும் தகவல்களின்படி நிஷா தான் இன்று எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.