ரஜினியின் 71 பிறந்தநாளான இன்று மோடி முதல் என பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் , மன்றத்தில் கொடியேற்றி , பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளையும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சில சுவாரசியமான தகவலகளைக் காண்போம்.


ரஜினியின் அப்பா ரானோஜிராவ் ஒரு காவலர். தாய் ராமாபாய் கோவையைச் சேர்ந்தவர். ரஜினியின் தாய் மொழி மராத்தியம் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒரு மராத்தி படத்திலும் அவர் நடித்ததில்லை. மராத்திய படங்களின் வாய்ப்புகள் வந்ததாகவும் ரஜினி மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.


தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தாலும் படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார். ஒவ்வொரு கட்சிக்கும் மிகுந்த கவனம் கொடுத்து நடிப்பார் . தமிழக அரசியலில் இன்று தனித்தனியாக அரசியலில் களம் இறங்கி இருக்கும் ரஜினியும் கமலும் இணைந்து ஒன்றாக 9 தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்கள். 


பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் தான். ரஜினியின் ஸ்டைல் ரொம்பவே தனித்துவமானது அதை யாராலும் செய்ய முடியாது நடிகர் ஷாருக்கான்  கூறியிருக்கிறார் . 


கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ரஜினி தான். ரஜினி ஆங்கில மொழியில் நடித்த  ஒரே படம் 1998ல் ’ப்ளட்ஸ்டோன்’. 


புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி அறை ஒன்று இருக்கிறது.இன்றும் ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்றால்,அந்த அறையில் தான் ரஜினி தங்குவார். பல உச்சங்கள் தொட்டாலும், பழைய உடைகள் கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.


ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.


’’ கண்டக்டராக சிவாஜி ராவாக நிம்மதியாக இருந்தேன், நீங்க தானே நடிகர் ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் புகழ் போதையை தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என குழந்தையைபோல் ரஜினி தேம்பி அழுததாக கே.பாலச்சந்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


இன்று சிஸ்டர் சிரியில்லை. எல்லாத்தையும் மாத்தனும் என்று சொல்லும் ரஜினி. அன்று 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று கூறியிருந்தார். 


பிரதமர் மோடியின் அபிமானிய என பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்திருக்கும் ரஜினி , ஜனவரியில் கட்சி தொடங்கி யாருடன் கூட்டணி வைக்க போகிறார் அல்லது தனித்துப்போட்டியிடுவாரா என்று தமிழக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.