தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அயலான்,சிபி இயக்கத்தில் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.இவற்றை தவிர சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தயாராகும் SK 20 படத்தில் நடிக்கவுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கமல்ஹாசன் அடுத்த தலைமுறையை சேர்ந்த நடிகரின் படத்தினை தயாரிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் அறிவிப்பு பிக்பாஸ் பைனலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.