தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பத்து வருடமாக தி.மு.க ஆட்சியில் இல்லாததால் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. ரஜினி ஜனவரில் கட்சி தொடங்க உள்ளார். கமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் முடித்து இருக்கிறார். மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்ததில் இருந்து , ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்று ரஜினி ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில் ரஜினியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதை குறித்து சீமான் , ‘’ மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிடுகின்றார்கள். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரஜினியை  ராமபுரம் தோட்டத்தில் கட்டிப்போட்டு அடித்திருப்பார்.


ரஜினிக்காக அவர்களது ரசிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனத்தை மேலைநாடுகள் பார்த்தால் நம்மை என்னவாக நினைப்பார்கள். தன்னை ரசிக்கும் ரசிகனைச் சரியாக வழி நடத்த முடியாத ரஜினி எப்படி இந்த நாட்டை வழி நடத்துவார்?’’ என விமர்சித்துள்ளார்.


மேலும் இன்று மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கும் கமல், அங்கு நடைப்பெற்ற பொது கூட்டத்தில் பேசும் போது, ‘’ புரட்சி தலைவர்எம்.ஜி.ஆர் மதுரையை 2 வது தலைநகரமாக. மாற்ற ஆசை பட்டார். அதன் நீட்சி தான் நான். என்னடா இப்படி சொல்றேனு நினைக்க வேண்டாம். தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்துவோம் ” என தெரிவித்தார்.


சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஜொலித்த எம்.ஜி.ஆர் மீது தமிழக மக்களிடத்தில் என்றும் ஒரு தனி இடம் உண்டு. அதுப்போன்ற ஒரு தனி இடத்தை பிடிக்கவே, அடுத்த எம்.ஜி.ஆர் யார் ? என்று கமல், ரஜினி மத்தியில் போட்டி நிலவுகிறது என்றும் அதனால் தான் மாறி மாறி தன்னை எம்.ஜி.ஆர் வுடன் ஒப்பிட்டுக்கொண்டு வருகிறார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் பேசி வருகிறார்கள்.