திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார் அமிர்தம். கடந்த சுதந்திரத்தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமிர்தத்தை, ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் , சாதியை காரணம் காட்டி தேசியக்கொடி ஏற்ற கூடாது என தடுத்தனர்.  


இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதன்பின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம். 


அதன்பின் தற்போது அமிர்தம் “ நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஜயகுமாரும், ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளேன் “ என்று தெரிவித்திருக்கிறார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு வார காலாவசகம் வழங்கி, அமிர்தம் மனு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள்  அறிக்கையையாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.