முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவினரும் பொய் 2ஜி வழக்கு பற்றி தொடர்ந்து பொய் கூறி வருவதாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.-யுமான  ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் 2 ஜி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதற்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆதாரம் காட்டியிருக்கிறார் ஆ.ராசா. 


” 2ஜி வழக்கு வதந்தி, ஊகம், கிசுகிசு என்று நீதிகளே தீர்ப்பில் எழுதி இருக்கிறார்கள்.  2ஜி வழக்கு தொடர்பாக முதல்வர் தனது தகுதியை மறந்து மிக மோசமாக பொய் பேசி வருகிறார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு விவரங்களை மறைத்து அதிமுகவினரும் பொய் கூறி வருகிறார்கள். 2 ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்கவில்லை என தீர்ப்பில்  நீதிபதிகளே கூறியிருக்கிறார்கள். 


ஆனால் ஜெயலத்திதாவின் சொத்து குவிப்பு வழக்கிலோ, ” மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் சுயநலம் கொண்டவர்களின் நடத்தை அரசியல் சட்டத்தின்மீது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறுவதாகும். அரசியலமைப்பு சட்டத்தின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது என்று நீதிகள் ஐந்து பக்கங்களில் தனியாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.  


மறைந்த ஜெயலலிதாவை பற்றி நான் தவறாக பேசியாத மேலும் ஒரு பொய்யை பரப்புகிறார்கள். யார் தவறு செய்தாலும், அதை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த முறையில்தான் நான் பேசினேன் , அநாகரீகமாக பேசவில்லை.


2 ஜி குற்றசாட்டு மற்றும் ஜெயலித்தாவின் சொத்துகுவிப்பு வழக்குகளில் எது உண்மை, எது பொய் என்று ஆதாரங்களுடன் ஊடங்களுக்கு முன்பு மக்களுக்கு விளக்கமளிக்கத் தயார் என முதல்வர் எடப்பாடியை விவாததிற்கு அழைத்திருந்தேன்.   ஆனால் இன்றுவரை பதில் இல்லை.” என்றியிருக்கிறார்.