திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். 

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் விவேக் இணையவாசிகளுக்கு பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி அசத்தினார். வெள்ளை நிற ஆடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிகவும் அழகாக காணப்பட்டார். காஸ்டியூம் ஸ்டைலிஸ்ட் சத்யா நடத்திய இந்த போட்டோஷூட் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. 

சமூக வலைத்தளத்தில் விவேக் குறித்த மீம்ஸ் எதுவாக இருந்தாலும், அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பகிரும் பழக்கம் அவரிடம் உண்டு. இந்நிலையில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம்ஸை பகிர்ந்துள்ளார். பவானி IPS படத்தில் ஒரு காமெடி காட்சியில் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்துவார் விவேக். அந்த காமெடி காட்சி கிட்டத்தட்ட இன்று உண்மையாகியுள்ளது. 

சுற்றுச் சூழலுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோடீசல் ஆக மாற்றும் திட்டம் தென்காசியில் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய ஆயிலை கொடுத்தால் அது பயோடீசல் ஆக மாற்றப்படுகிறது என்றும், இதன் மூலம் ஒருமுறை ஆயிலை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைப்பது மட்டுமின்றி பயோடீசல் உற்பத்தி அதிகரிப்பதால் நாட்டின் அன்னிய செலவாணியும் குறைகிறது என்பது குறிப்பிடதக்கது. 

இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் தளத்தில், பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி.. இப்போது மீம்சில் என்று குறிப்பிட்டுள்ளார். அன்று விவேக் நடித்த காமெடி காட்சி இன்று நிஜமாகியுள்ளது

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் விவேக். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார் விவேக். தற்போது பொள்ளாச்சியில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.