லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. 

தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் டீஸரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர். அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர்.
தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. 

இதனிடையே முன்னணி ஓடிடி தளங்கள் மாஸ்டர் படத்தைக் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். 

பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்டர் ரிலீஸ் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரிலீஸ் அறிக்கைக்கு தளபதி ரசிகர்கள் தாண்டி திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், லோகேஷ் கனகராஜின் பதிவை ரீட்வீட் செய்து Yes என்று கூறியுள்ளார். இதனால் மாஸ்டர் படத்திற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கிறார் தனுஷ் என்று தெரிகிறது. இந்த பதிவை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.