என்.ஜி.கே படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்பட பணிகளைத் தொடங்கியுள்ளார் செல்வராகவன். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. தனுஷ் - செல்வராகவன் கூட்டணி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன், எடிட்டராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் செல்வராகவன். இந்நிலையில் நானே வருவேன் படத்தில் பாடல் குறித்த ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். ஓ மை காட்..எப்படி பட்ட ஒரு பாடலை யுவன் கம்போஸ் செய்துள்ளார் என்று அவரது குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் கூறிய இச்செய்தி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. 

இயக்கம் தவிர்த்து நடிக்கவும் செய்கிறார் செல்வராகவன். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகன், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.