தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு,  ஏற்காடு தொகுதியில்  தேர்தல் பரப்புரை  மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏற்காடு தொகுதியில் . வாழப்பாடியில் வேட்பாளர் சித்ராவை ஆதரித்தும், கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட தம்பம் பட்டியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும் முதல்வர் வாக்கு சேகரித்தார். 

ஏற்காடு பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ அதிமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரத்யேக திட்டங்கள் மூலம் நல்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். துண்டு சீட்டு இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா. அதிமுகவின் இந்த நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் இந்த விருப்பம் தேர்தலில் நிச்சயம் நிகழும். “ என்று பேசினார்.