மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது விஜய்சேதுபதியின் புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தை அசத்தி வருகிறது. 

லாக்டவுனில் பலரும் தாடி மீசையுடன் தான் இருக்கின்றனர். அதே போல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சேது, போட்டோஷூட் செய்துள்ளார். புகைப்பட கலைஞர் L ராமசந்திரன் கிளிக் செய்த இந்த படங்கள் வைரலாகி வருகிறது. விஜய்பாலாஜி டைரக்ட் செய்த இந்த ஷூட்டில் முரளிதரன், லோகநாதன் இணை இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். அருள் சித்தார்த் எடிட்டிங் செய்துள்ளார். ஜான்சன் மற்றும் ஜோசப் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர். இந்த மேக்கிங்கை ஷேக்ஸ் ரோவர் செய்துள்ளார். தரன்சியா தயாரித்துள்ளார். 

நவரசங்களையும் முகத்தில் கொண்டு வர தனி திறமை வேண்டும். கோபம், சிரிப்பு, சோகம் என எக்ஸ்ப்ரஷனில் பட்டையை கிளப்பியுள்ளார் சேதுபதி. திரையுலகிற்கு வருவதற்கு முன் கூத்து பட்டறையில் இருந்ததால், முகபாவனைகளை சரியாக போஸில் கொண்டுவந்துள்ளார் சேது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

லாக்டவுன் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.