மகாராஷ்டிராவில் சிறுமியை அண்ணன் தம்பி உள்பட 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர், தந்தை இல்லாத நிலையில், தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாள்.

அந்த வீட்டில் ஆண் துணை இல்லாததை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான சுபம் 25 வயதான வைபவ் ஆகியோர், சிறுமி மீது ஒரு கண் வைத்துள்ளனர். 

அண்ணன் தம்பியான சுபம் - வைபவ் ஆகிய இருவரும், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி, அவரிடம் அளவுக்கு மீது பேசி பழகி வந்துள்ளனர். அந்த சிறுமியும், இவர்கள் நல்லவர்கள் என்று நினைத்து, சகஜமாகப் பேசி பழகி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அண்ணன் தம்பியான சுபம் - வைபவ் ஆகிய இருவரும், சிறுமியின் வீட்டில் வந்து முதலில் நோட்டம் விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர், ஒரு திட்டத்தோடு சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த அண்ணன் தம்பியான சுபம் - வைபவ் ஆகிய இருவரும், சிறுமியை மிரட்டியே பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அவருக்குத் தெரியாமலேயே சுபம் - வைபவ் ஆகிய இருவரும், தங்களது செல்போனில் சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அதன் பிறகு, தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சிறுமியிடம் அத்து மிறி நடந்துகொண்டதோடு, சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கொடூரத்தின் உச்சமாக அண்ணன் தம்பியான சுபம் - வைபவ் ஆகிய இருவரும் சேர்ந்து, தங்களது நண்பர்களிடம் உல்லாசமாக இருக்கும் படி சிறுமியை மிரட்டி உள்ளனர். இதற்குச் சிறுமி மறுப்பு தெரிவித்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தங்கள் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாசப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும், அவர்கள் கூட்டாகச் சேர்ந்து மிரட்டி உள்ளனர்.

இதனால், மானத்திற்குப் பயந்த அந்த சிறுமி, வேறு வழியின்றி இதிலிருந்து தப்பிக்க முடியாமல் அண்ணன் - தம்பிகள் இருவரும் கூறியதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் படி, வெறிபிடித்த காமூககர்களான சுபம் - வைபவ் ஆகிய இருவரின் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த சிறுமி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கருதி, நடந்ததையெல்லாம் அழுதுகொண்டே தனது தாயாரிடம் கூறி கதறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், அப்படியே திகைத்துப் போய் நின்றுள்ளார். இதனையடுத்து, தன் மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து, அங்குள்ள சாகுபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அண்ணன் தம்பியான சுபம் - வைபவ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த அவர்களது நண்பர்கள் 4 பேர் குறித்தும் விபரங்களைச் சேகரித்தனர்.

அதன்படி, சுபம் - வைபவ் ஆகியோர்களின் கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான விஜய் விலாஸ், 27 வயதான ஜாதவ், 26 வயதான சுனில் பிங்கலே, 22 வயதான சேகர் மாதவ் ஆகிய 4 பேரையும் போலீசார் அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியை அண்ணன் தம்பி உள்பட 6 பேர் சேர்ந்து, மிரட்டியே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.