முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டிருக்கிறார்.

உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மகன் இன்பநிதின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் உதயநிதி. வெகுநாட்களாக இன்பாவின் புகைப்படம் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்க ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. 

படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் இருந்தனர். இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Udhayanidhi Stalin (@udhay_stalin)